1585-1614 வரை விஜய நகர சாம்ராஜ்யத்தை ஶ்ரீவேங்கடபதி என்பவர் அரசாண்டார். நேட்டூர் தாதாசாரியர் என்பவர் அவருக்கு மந்திரியாக இருந்தார். மந்திரி சபையிலே இவர் தலை சிறந்தவராக இருந்தார். இவரின் நிர்வாகத்தின் கீழ் இருந்த பிரதேசங்களில் இவருக்கு நல்மதிப்பும் மரியாதையும் இருந்தது. கோயில்கள் சரிவர பராமரிக்கப்பட்டன. இவரை ’நேட்டூர் கோடி கல்யாண லக்ஷ்மிகுமார தாதாசாரியர்’ என்று அழைப்பர். ஐந்து பெண்ணுக்கு கல்யாணம் பண்ணினால் அரசனும் ஆண்டியாவான் என்று சொல்லுவர், ஆனால் இவரோ எண்ணற்ற கல்யாணங்கள் செய்து வைத்துள்ளார். திருமகள் லக்ஷ்மியின் அருளாசியினால் இதை இவர் நடத்தி வைக்க முடிந்தது. இவர் லக்ஷ்மியின் மகனாகவே கருதப்பட்டார் அதனால் ’லக்ஷ்மிகுமார்’ என்றும் அழைக்கப்பட்டார். புதிய கோயில்கள் கட்டியதாலும் பழைய கோயில்களை புதுப்பித்தாலும் இவருக்கு ’உபய வேதாந்தாசாரி’ என்ற பட்டமும் உண்டு.
திருமலை பெரிய நம்பி அவர்கள் ஶ்ரீராமாநுஜரின் மாமாவும் குருவும் ஆவார். அவருடைய பரம்பரையில் வந்தவர் தான் நேட்டூர் தாதாசாரியார் அவர்கள். இவரின் மூதாதய்ர்களில் ஒருவர் நேட்டூரிலிருந்து அப்பொழுதய விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலை நகரமான ஆனைகுத்திக்கு சென்றார். ஶ்ரீவிருபாக்ஷா அரசனிடம் தனது புலமையை வெளிபடுத்தி பரிசுகள் பெற்று வரவே சென்றார். ஆனைகுத்தியை அடைந்து அரசனின் அனுமதியுடன் பதினெட்டு நாட்கள் மஹாபாரதம் உபன்யாசம் செய்தார். முடிவடைந்த உடன் அவருக்கு அரசன் பரிசுகள் பல கொடுத்தான். மறுநாள் அவர் கண் விழித்தப் போது ஆனைகுத்தியில் அரண்மனையும் இல்லை அதிக ஜனங்களும் இல்லை. விருபாக்ஷா தனது தலைநகரை ஆனைகுத்தியிலிருந்து அப்பொழுது அருகிலிருந்த ஹம்பிக்கு மாற்றிய செய்தியே அவருக்கு அப்பொழுது தான் தெரிந்த்து. ஆனைகுத்தியில் நீண்ட நாட்கள் நடந்த போரில் இறந்தவர்கள் எல்லோரும் அவரின் மஹாபாரத உபன்யாசத்தைக் கேட்டு மோக்ஷம் எய்தினர்.
அப்படிப்பட்ட மஹாபுருஷரின் பரம்பரையில் வந்த ஶ்ரீதாதாசாரியார் அவர்கள் காஞ்சிபுரம் அருகில் ஆஞ்சநேயருக்காக தனிக்கோயில் ஒன்று எழுப்பியள்ளார். சாதாரணமாக ஆஞ்சநேயர் கோயில் என்பது கருவறை, சிறிய பிரகாரம், முன்மண்டபம் இவ்வளவுதான் இருக்கும். ஆனால் இவர் கட்டிய இக்கோயில் பல விசயங்களில் விசேடமானது. காஞ்சிபுரத்திலிருந்து கலவை செல்லும் பாதையில் பாலாறை கடந்த உடன் வரும் முதல் கிராமம் ஐயன்குளம். தூரத்திலிருந்தே தெரியும் இந்த அழகிய ஆஞ்சநேயர் கோயில்.
சாதாரணமாக கோயில் குளம் என்றால் கோயிலின் பரப்பை விட சிறியதாகவோ அல்லது சமமாகவோதான் இருக்கும். ஆனால் ஶ்ரீதாதாசாரியார் நூற்று முப்பத்தாறு ஏக்கர் பரப்பளவில் குளம் வெட்டினார். கரைகளில் கற்படிகள் கட்டினார். அதன் கரையில் அழகான கோயில் அனுமாருக்காக எழுப்பினார். நீர்பரப்பிலிருந்து பார்த்தால் அவ்வழகிய கோயில் குளத்தில் மிதக்கும் தெப்பம் போல் இருக்கும்.
குளம் வெட்டும் போழுது, அனுமாரே தன் வாலினால் தோண்டி குளத்தை நிறைவுச் செய்தார் என்றால் ஶ்ரீதாதாசாரியாரின் பக்தியை என்னென்று சொல்வது!
குளத்தின் தென்கரையில் அனுமாருக்காக எழுப்பப்பட்ட கோயில் மிக கம்பீரமான இராஜகோயுரத்துடன் இருக்கிற்து. ப்டிகள் ஏறி சென்றால் கோயில் இராஜகோபுரம், மதில் இவைகளுக்கு முன்னால் மதிலை ஒட்டி பெரிய மண்டபம் உள்ளது. இருபத்து நான்கு தூண்களுடன் கூடிய மண்டப கால்களிலும் பல தேவதைகளின் உருவமுன் ஆசாரிய மஹாபுருஷர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. உய்ரிய வேலைபாடுகளுடன் கூடிய இம்மண்டபம் யாத்திரிகள் தங்க வசதியாக உள்ளது. இதே போல் கோயிலின் தென்மதிலை ஒட்டியும் மண்டபம் உள்ளது. கோயிலுக்கு இந்த இருபுறத்திலிருந்தும் நுழைவாயில் உள்ளது.
கோயிலின் நான்கு புறமும் விஜயநகர பாணியில் உயரமான நாலுகால் மண்டபம் கோபுரத்துடன் உள்ளது. ஸ்வாமி புறப்பாட்டின் போது இவைகளில் உச்சவர் எழுந்தருளுவது சம்பரதாயம். இம்மண்டபகங்கள் கோயிலின் கம்பீரத்தை மேலும் பரிமளிக்கச் செய்கிறது.
இராஜகோபுரம் வழியாக கோயிலுள் சென்றால், பெரிய மண்டபம். மண்டபத்தின் கூறையில் மிக அழகான வண்ணங்களால் வரையப்பட்டுள்ள ஓவியங்கள். நேரே கருவறை. கருவறையில் ஶ்ரீசஞ்சீவிராயர் மிக அமைதியாக நின்றகோலத்தில் கூப்பிய கரங்களுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். சங்கும் சக்ரமும் பின்னணியில் மிக அழகாக இருக்கிறது.
கருவறையின் முன் வலதுபுறம் ஶ்ரீலக்ஷ்மி தேவி அமக்கப்பட்டுள்ளாள். முன் கூறிய மாதரி ஶ்ரீதாதாசாரியார் ஶ்ரீலக்ஷ்மி உபாசகர். இங்கு இருப்பதை தவிற குளத்தின் வடகரையில் ’நடபாவி’ அமைத்து அங்கும் ஶ்ரீலக்ஷ்மிதேவி பிரதிஷ்டை செய்துள்ளார்.
கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளிலிருந்து சுபத்ரா, ஸயாம் முதலிய வெளி தேசங்களிலிருந்தும் கோயிலுக்கு நன்கொடைகளும், அன்பளிப்புகளும் கொடுத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. தாதா ஸமுத்ரம் எனவழைக்கப்படும் குளத்தின் கரையில் கோயில் கொண்டுள்ள ஶ்ரீசஞ்சீவிராயரை போற்றி இருபத்தைந்து பத்திகள் உள்ள ஸ்லோகம் ஒன்றினை ஶ்ரீதாதாசாரியார் எழுதி கல்லில் பதித்துள்ளார்.
கோயிலுக்குள் தென்கிழக்கிலும், வடகிழக்கிலும் அழகிய இரு மண்டபகங்கள் உள்ளன. ஶ்ரீராமநவமியின் பொழுது ஶ்ரீராமரும், ஶ்ரீசீதா தேவியும் இம்மண்டபத்தை அலங்கரிப்பார்கள். அவர்கள் திருமண வைபவம் மிக விமர்சையாக கொண்டாடப்படும். தாதா ஸமுத்திரம் ஶ்ரீசஞ்சீவிராயர் அக்கண் கொள்ளா காட்சியினை கண்டு ரசிப்பார். இதை தவிர சித்திரை மாதம் பௌர்ணமியன்று காஞ்சிபுரத்திலிருந்து ஶ்ரீவரதராஜ பெருமாள் இக்கோயிலில் எழுந்தருளுவார். ஶ்ரீஹனுமத் ஜயந்தியும் இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அனுபவம்
ஶ்ரீ சஞ்சீவி ராயர்- சீதா லட்சுமி சுதான் இந்த க்ஷேத்திரத்தில் அனைவரையும் தனது
லட்சுமி கட்டாக்ஷத்துடன் ஆசீர்வதிக்க எப்போதும் தயாராக இருக்கிறார். வாருங்கள்
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஜூலை 2014
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020