home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீசஞ்சீவிராயன் திருக்கோயில், ஆவூர், [திருச்சி அருகில்] புதுக்கோட்டை மாவட்டம், தமிழ் நாடு


ஶ்ரீசஞ்சீவிராயன் திருக்கோயில், ஆவூர், [திருச்சி அருகில்] புதுக்கோட்டை மாவட்டம், தமிழ் நாடு

ஜீ. கே. கௌசிக்


ஆவூர்

திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையில் இருக்கும் ஆவூர் என்னும் கிராமத்தில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. திருச்சிக்கு மிக அருகில் உள்ளது இக்கிராமம். புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வரும் மாத்தூர் ரவுண்டானாவிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கிராமம். இக்கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிறது. ஆவூரான் என்னும் நதி கோரை என்றும் அழைக்கப்படுகிறது, இக்கிராமத்தை ஒட்டி ஓடுகிறது. ஆவூருக்கு சற்று முன் வரும் முல்லிபட்டி/பீடாம்பட்டி கிரமத்தில் இந்த சஞ்சீவிராயன் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. திருச்சி பஸ் நிலயத்திலிருந்து சுமார் பதினாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில். மாத்தூரிலிருந்து கோயில் வரும் வழி முழுவதும் புதர்களும் மரங்களும் நிறைந்திருக்கின்றன. அடர்ந்த காடு என்று சொல்ல முடியாது. கோயிலுக்கு அருகாமையில் எந்த வித வீடுகளோ கடைகளோ எதுவும் இல்லாமல் சலனமும் இல்லாமல் இருக்கிறது.

யாத்திரிகர்களின் தங்குமிடம் ஶ்ரீசஞ்சீவிராயன் திருக்கோயில், ஆவூர், [திருச்சி அருகில்] புதுக்கோட்டை மாவட்டம், தமிழ் நாடு

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் இவ்விடம் எப்படி இருந்திருக்கும் என்பது கற்பனை செய்வது சற்று கடினமே. தெலுங்கை தாய் மொழியாக கொண்ட சில யாத்திரிகர்கள் அப்பொழுது இவ்வழியாக வந்தனர். இரவு இங்கு தங்கினர். யாத்திரிகர்களின் தலைவருக்கு இந்த இடத்தில் ஏதோ ஈர்ப்பு ஏற்பட்டது. சற்று அதிக நாள் தங்க முடிவு செய்தனர். அங்கு தங்கிய சமயம் அருகாமையில் தங்கள் உணவை தேடி அலைந்த போது, சுற்றிலும் பலவிதமான மூலிகைகள் இருப்பதை அறிந்தனர். மிக கொடிய நோய்களையும் அழிக்கவல்ல அறிய பல மூலிகைகளை கண்டறிந்தனர்.

ஶ்ரீ ஆஞ்சநேய விக்ரஹம்

இப்படி இவர்கள் இங்கேயே தங்குவதா என்பதை யோசிக்கும் சமயம் பூமியில் புதைந்த சற்றே வித்யாசமான பாறையை கண்டனர். பூமியிலிருந்து வெளிக்கொணர்ந்த பொழுது அது விநாயகர் விக்ரஹமாக இருந்தது. பின் சற்று தூரத்தில் பூமியில் புதைந்திருக்கும் மற்றொரு பாறையை கண்டனர். ஆனால் அதை இவர்களால் பூமியிலிருந்து வெளியில் கொண்டு வர முடியவில்லை. அன்று இரவு தலைவனின் கனவில் ஶ்ரீஆஞ்சநேயர் தோன்றி தான் இங்கு இருப்பதாகவும் தன்னை அவர்கள் பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஶ்ரீ சஞ்சீவிராயனுக்கு வழிபாடு

அன்று முதல் அவர்கள் ஶ்ரீஆஞ்சநேயரை அந்த பாறையில் வழிபடலாயினர். இந்த குழுவினருக்கு இங்கு கிடைக்கும் மூலிகைகளை பற்றிய விவரங்கள் தெரிந்த பின் அக்கம் பக்கத்தினருக்கு வியாதிக்கு மருந்து கொடுக்க, வியாதியும் தீர்ந்தது. ஒன்றும் அறியாத அவர்களுக்கு ஶ்ரீஆஞ்சநேயரின் அருளால் மட்டுமே இது சாத்தியம் ஆயிற்று என்பதில் இவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை.

ராஜாவின் வரவும் அனுமாருக்கு திருக்கோயிலும்

பதிநான்காம் நூற்றாண்ட்டில் இப்பிராந்தியத்தின் அரசன் காட்ட்ல் வேட்டையாட வந்த சமயம் இங்கு வந்து இவர்களை கண்டு விசாரித்தான். இவர்கள் மூலிகைகளை பற்றி அறிந்து வைத்திருந்ததை தெரிந்துக் கொண்டான். குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்த அரசனுக்கு இவர்கள் குழந்தை பாக்யம் உண்டாகும் மூலிகை மருந்து கொடுத்தனர். சில காலத்தில் அரசனுக்கு புத்திர பாக்யம் பலிதமாயிற்று. அதனால் சந்தோஷம் அடைந்த அரசன் ஆவூருக்கு வந்து ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டினான். அதன் பிறகு இங்குள்ள ஶ்ரீஆஞ்சநேயர் பல வியாதிகளை குணப்படுத்த வல்லவர் என்ற நம்பிக்கை பறவலாக தெரிய வந்தது.

திருக்கோயிலுக்கும் பூஜாரிகளுக்கும் மான்யம் திருதேர் விழா, ஶ்ரீசஞ்சீவிராயன் திருக்கோயில், ஆவூர், [திருச்சி அருகில்] புதுக்கோட்டை மாவட்டம், தமிழ் நாடு

பின்பு பல அரசர்களும், செல்வந்தர்களும் இத்திருக்கோயிலுக்கு பல உபயங்கள் செய்துள்ளனர். கோயிலை புதுப்பித்தும், செப்பனிட்டும் உள்ளனர். இன்று இத்திருக்கோயிலில் பூஜைகள் முன்னம் வந்த யாத்திரிகளின் பரம்பரையினரால் தான் செய்யப்படுகிறது. தற்பொழுது இருப்பவர்கள் 21ஆம் தலைமுறையினர். சஞ்சீவிராயர் கோயில் பூசாரியான இவர்களுக்கு 1805ஆம் ஆண்டு அன்றய அரசனால் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. அதற்கான செப்பேடு இவர்கள் வைத்திருக்கிறார்கள்.

திருக்கோயிலில் பூஜைகளும் விசேடங்களும்

மார்கழி மாதம் ஶ்ரீஹனுமத் ஜயந்தி மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் ஊஞ்சல் திருவிழாவும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் பத்து நாட்களுக்கு பிரமோத்ஸவம் அனுசரிக்கப்படுகிறது. அச்சமயம் நடத்தப்படும் திருதேர் விழா இங்கு மிக பிரபலம். ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலுக்கு என்று தேர் இருக்கும் கோயில்கள் மிக குறைவே, அதில் இதுவும் ஒன்று என்பதிலிருந்து இக்கோயிலின் பெருமை விளங்கும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீசஞ்சீவிராயன் திருக்கோயில், ஆவூர்

 

அனுபவம்
லக்ஷ்மணனுக்கு மருந்து மலையை எடுத்து வந்ததால் அவர் சஞ்சீவிராயர் ஆனார். இங்கு எல்லா வியாதிகளுக்கும் மருந்தாக விளங்கும் சஞ்சீவிராயரை தரிசித்து எல்லா வியாதிகளிலிருந்தும் விடுபடுவோம் வாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஏப்ரல் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+